
திருச்சி அருகே சம்பவம் :
10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்.
போக்சோ சட்டத்தின் கீழ் காதலன் கைது.
திருச்சி கொடியாலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் ( வயது 26).இந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு காதல் வலை வீசினார். அதில் அந்த மாணவியின் சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில் காதலியின் வீட்டிற்கு செல்லும் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தினார்.
கடந்த ஓர் ஆண்டாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக உறுதி அளித்து அவரை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார். அதன் பின்னர் படிப்படியாக மாணவியை சந்திப்பதை தமிழரசன் தவிர்த்து வந்தார். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே தமிழரசன் பலாத்காரம் செய்ததில் அந்த மாணவி கர்ப்பம் தரித்துள்ளதாக கூறப்பட்டது.
7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் அந்த மாணவி தமிழரசனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த அந்த சிறுமி, ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திருமண ஆசை காட்டி தமிழரசன் தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டதாக புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் அனு பல்லவி போக்சோ சட்டத்தின் கீழ் தமிழரசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
10ம் வகுப்பு மாணவி காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாக இருக்கும் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

