
திருச்சி மில் காலனியில்
கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சி மில் காலனி மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதை அடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் கள்ளிக்குடி கரிபாஸ்கர் காலனியைச் சேர்ந்த கிரண் (வயது 24) என்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் .அவரிடம் இருந்து 1100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

