திருச்சியில்
வியாபாரி மற்றும்
காண்ட்ராக்டரிடம் வழிப்பறி கொள்ளை.
3 பேர் கைது.
திருச்சி மேல சிந்தாமணி கரூர் பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷாகில் (வயது 32) இவர் திருச்சி எடமலைப்பட்டி புதூர் பசுமை பூங்கா அருகில் ஹெல்மெட் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த 2 பேர் இவரை கத்தி முனையில் மிரட்டி ஹெல்மெட் மற்றும் பணத்தை பறித்து சென்றனர் .
இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த பிரபாகரன், அருண்குமார் ஆகிய 2 வாலிபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கத்தி, பணம்,ஹெல்மெட் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில்
மதுரை அன்னுபாறை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் முத்துமணி (வயது 25). இவர் பன்றி பிடிக்கும் காண்ட்ராக்டர். காரைக்காலில் பணிகள் செய்து வருகிறார். இந்நிலையில் மதுரையிலிருந்து திருச்சி வந்துள்ளார். அப்போது திருச்சி-தஞ்சை மெயின் ரோட்டில் ஒரு ட
கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் முத்துமணியிடம் கத்தி முனையில் பன்றி பிடிக்கும் வலையை மிரட்டி பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து அவர் அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுசீலா 4 பேர் மீது வழக்குப்பதிந்து முத்துக்குமார் என்பவரை கைது செய்தார்..மற்ற மூன்று பேரை தேடி வருகின்றனர்.