திருச்சி ப்ரீஸ் ஹோட்டலில் 50% தள்ளுபடி என விளம்பரம் செய்து. பழைய துணிகளை விற்பனை செய்யும் வடநாட்டுக்கும்பல்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரீஸ் ரெசிடென்சியில் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள பிராண்டட் துணிகள் 50% வரை தள்ளுபடி செய்து அறுபது லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம் என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வட இந்தியர்கள் கண்காட்சி நடத்தி வருகின்றனர்.
இந்த விளம்பரங்களைக் கண்டு துணி எடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செல்பவர்கள் முதல் மாடி ஏறி சென்று பலரும் ஏமாந்து திரும்பி வருகின்றனர்.
அங்கு உள்ள துணிகள் அனைத்துமே பழைய ஸ்டாக்,மற்றும் ஒரு சில குறைகளால் ரீட்டனாகும் கம்பெனி ஸ்டாக்குகள் தான் அங்கு உள்ளது.
மேலும் பல ஆண்டுகளாக இந்தியா முழுவதும் ஆங்காங்க இதுபோன்று விளம்பரம் செய்து கண்காட்சி நடத்தி விட்டு இங்கு வந்துள்ளனர்.

அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்று வீட்டில் சென்று திட்டு வாங்கி திரும்பி கொடுத்தால் ரிட்டன் வாங்க மாட்டேன் என தகராறு வேறு நடப்பதாக தகவல்.
துணி எடுக்கும் வாடிக்கையாளர்கள் அவர்கள் வெளியில் வைத்துள்ள விளம்பர ப்ளக்ஸ் போர்டுகளை பார்த்தாலே தெரியும்.
பல ஊர்களிலும் வைத்து உபயோகப்படுத்தி கிழிந்த நிலையில் உள்ள போர்டுகளையே அவர்கள் இங்கு வைத்துள்ளனர். ஒரு சில நூறு ரூபாய்க்கு அடிக்கக்கூடிய பிளக்ஸ் போர்டுகளை கூட ஒவ்வொரு ஊருக்கும் மாற்ற முடியாத இவர்கள் 50 சதவீதம் எவ்வாறு தள்ளுபடி தருவார்கள்.

பழைய கிழிந்த விளம்பர பிளக்ஸ் போர்டுகள் போன்றதான் உள்ளே இருக்கும் துணிகளும்.
உள்ளே இருக்கும் துணிகளின் தரத்திற்கு இவர்கள் வெளியில் வைத்திருக்கும் உபயோகப்படுத்திய போர்டுகளே சான்று.

