
இந்தியா 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், மூத்த குடிமக்களை கவுரவிக்கும் வகையில் அஞ்சல் துறை சார்பில் மத்திய மண்டலத்தில் ‘அகவை 60 அஞ்சல் 20’ என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமினை மத்திய அஞ்சல் மண்டல தலைவர் அப்பா கண்ணு கோவிந்தராஜன், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய மண்டலத்தில் உள்ள 24 தலைமை தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் நடந்த முகாமை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுவாதிமாதுரிமா தொடங்கிவைத்து, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களுக்கு அதற்கான கணக்கு புத்தகத்தை வழங்கி அந்த சேமிப்பு திட்டம் குறித்து பேசினார். முன்னதாக உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) குருசங்கர் வரவேற்றார். முடிவில் முதுநிலை அஞ்சல் அதிகாரி பசுபதி நன்றி கூறினார்.

