திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில்
மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.
திருச்சி அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி திருச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியை
தமிழ்நாடு பேட்மிட்டன் சங்க செயலாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய பேட்மிட்டன் சங்க துணைத் தலைவரும், தமிழ்நாடு பேட்மிட்டன் சங்க தலைவருமான
டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பேட்மிட்டன் சங்க செயலாளராக அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மதுரை உள்பட அனைத்து மாவட்டங்களில்
இருந்தும் நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட பேட்மிட்டன் சங்க தலைவர் விஜயகுமார்,
செயலாளர் ராஜ்மோகன், துணைச் செயலாளர் டேனியல்,துணைத்தலைவர் மாறன்,
ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்