பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சி அரியமங்கலத்தில் ஆர்ப்பாட்டம நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ம குது தலைமை தாங்கினார்.
உசேன், புகழ், ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா கண்டன கோஷம் எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காஜா முகைதீன் ,பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்: –
அப்போது பேரறிவாளனுக்கு கிடைத்த சலுகை 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளுக்கு ம் கிடைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.