ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63 ) இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இவருடைய மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் வீட்டில் அண்ணாதுரை தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தனிமை அவரை வாட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட அண்ணாதுரை வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.