கடன் தொகையை கேட்க
வீடு தேடிச் சென்ற நிதி நிறுவன ஊழியருக்கு அடி- உதை
திருச்சி உறையூர் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 23). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கலெக்சன் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிதி நிறுவனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் இப்பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரது மனைவி கடன் பெற்றிருந்தார். ஆனால், அவர் கடன் தொகையை முறையாக செலுத்தவில்லை. இதையடுத்து பிரகாஷ் அவரது வீடு தேடிச் சென்றுள்ளார்.
இதில் பாக்கியராஜிக்கும் பிரகாசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் நிதி நிறுவன ஊழியரை செங்கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது பற்றி பிரகாஷ் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.