Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பழமையான கிறிஸ்தவ ஜெப மையத்தை அப்புறப்படுத்த ஐசிஎப் பேராயர் ஜான் ராஜ்குமார் எதிர்ப்பு.

0

'- Advertisement -

 

திருச்சியில் 25 ஆண்டுகளாக செயல்படும் கிறிஸ்தவ ஜெப மையத்தை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிக்கு ஐசிஎப் பேராயர் ஜான் ராஜ்குமார் எதிர்ப்பு.

இதுகுறித்து திருச்சி ஐசிஎப் பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு பால்பண்ணை எதிரில் அமைந்துள்ள அகில இந்திய கிறிஸ்தவ கர்மேல் ஜெப மையம் என்ற ஆலயம் செயல்பட்டு வருகிறது.

இதனை அகற்ற வேண்டும் என்று சொல்லி இந்திய அரசும், தமிழக அரசும் வலியுறுத்தி நோட்டீஸ் அளித்து உள்ளனர்.

அது ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் இது ஆக்கிரமிக்கப்பட்ட இடமில்லை.

ஐந்தாண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் இருந்தால் அதற்கு பட்டா வழங்க வேண்டும் என்று சொல்லி அரசு உத்தரவு உள்ளது. ஆனால் 25 ஆண்டுகளாக அகில இந்திய கிறிஸ்துவ கர்மேல் ஜெப ஆலயம் செயல்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்லி நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள்.

அதற்கு நெடுஞ்சாலைத்துறை, இந்திய அரசு துறை அதிகாரிகளிடம் முறையிட்டு இருக்கிறார்கள்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

25 ஆண்டுகள் ஒரு கிறிஸ்தவ அமைப்பு செயல்பட்டு இருக்கிறதை அப்புறப்படுத்த வேண்டும் என்பது மிகவும் வருத்தத்திற்கும், வேதனைக்குரியது. வழிபாட்டு சுதந்திரத்தை பறிக்கும் முறையாகும். இதனை திருச்சி ஐ.சி.எப். பேராயம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பெயரில் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்று செயல்படுவது ஏற்புடையது அல்ல. இது மிகுந்த கண்டனத்துக்குரியதாகும். இதனை பரிசீலனை செய்து இந்திய அரசும், தமிழக முதலமைச்சர், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்புறப்படுத்துவது என்று சொன்னால் அதற்குரிய மாற்று இடத்தை அருகிலேயே அமைத்துக் கொடுத்து கிறிஸ்தவ வழிபாட்டு அமைப்புக்கு முறையான ஒரு அணுகுமுறை வழிகாட்டுதல் செய்ய வேண்டும். இவ்வாறு ஜான் ராஜ்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.