திருச்சியில் பட்டதாரி வாலிபர் மயங்கி விழுந்து சாவு.
திருச்சி கே.கே.நகர் ராஜாராம் சாலை ராமச்சந்திர தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் தங்கமணி. இவரது மகன் முரளிதரன் ( வயது 34 ) எம்.டெக். பட்டதாரி .
இவரது பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் கே.கே. நகர் ராமச்சந்திர தெருவில் வசித்து வந்த இவர் குடி போதைக்கு அடிமையானவர்.
இந்நிலையில் நேற்று திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.