திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கவிதை, ஓவியப்போட்டி நடைபெற்றது.
திருச்சியில் கவிதை, ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு
பரிசளிப்பு, நூல் வெளியீட்டு விழா.
மகளிர் தினத்தையொட்டி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.
போட்டிக்கு கவிஞர் ரத்திகா தலைமை தாங்கினார்.
முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர செயலாளர் சிவ. வெங்கடேஷ் பரிசுகளையும்,
மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சான்றிதழ்களையும் வழங்கினர்.
ஆறுதல் பரிசாக நூல்களும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முன்னதாக
நூலாசிரியரும், கவிஞருமான வெற்றி நிலவன் எழுதிய அழகு கூடும் முகங்கள் என்ற சிறுகதை புத்தகத்தை மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா வெளியிட அதனை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைபதிவாளர் சி.வெங்கடேஷ் பெற்றுக் கொண்டார். கவிஞர் வெற்றி நிலவன் ஏற்புரையாற்றினார்.
விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக எழுத்தாளர் சீத்தா வரவேற்றார். முடிவில் மாநகர தலைவர் இளங்குமரன் நன்றி கூறினார்.