பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் 46வது வார்டு திமுக கவுன்சிலர் ரமேஷ்.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் 46 வது வார்டு வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் கோ.ரமேஷ் தனது பிரச்சாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்.
இந்த வார்டுக்கு உட்பட்ட ஜீவா தெரு பகுதிகளில் ரோடுகள் செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. காமமேடை அருகில் நீண்ட நாட்களாக தூர் வராமல் இருந்த சாக்கடைகள் தூர்வாரும் பணி தற்போது கவுன்சிலர் ரமேஷ் நடவடிக்கையால் நடைபெற்று வருகிறது.
இதேபோன்று அனைவருக்கும் குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
தொடர்ந்து மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் கவுன்சிலர் கோ.ரமேஷ் அவர்களை அந்தப் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.