Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வேளாண்மை கல்லூரியில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவின் துவக்க விழா.

0

'- Advertisement -

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுக் குழுவின் தொடக்க விழா.

திருச்சிராப்பள்ளி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள திருச்சி வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் திருநங்கைகளுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவின் துவக்க விழா நடைபெற்றது.

Suresh

இவ்விழாவிற்கு தலைமையேற்று துவக்கி வைத்து துவக்க உரை நிகழ்த்திய திருச்சிராப்பள்ளி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பூ. மாசிலாமணி சுயமாக தொழில் புரிந்து சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள திருநங்கைகளுக்கு இந்த திருநங்கை மேம்பாட்டு குழு ஒரு வரப்பிரசாதம் என்றும் தொழில்முனையும் புதிய சிந்தனையோடு வரும் திருநங்கைகளுக்கு வேண்டிய வழிகாட்டுதலும் அதில் அவர்கள் சாதிப்பதற்கான ஆலோசனைகளையும் ஆக்கபூர்வமாக வழங்கும் என்றும் கூறினார்.

திருநங்கை மேம்பாட்டுக்குழுவின் அறிமுக உரை ஆற்றுகையில் இந்நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரி சு. சந்தோஷ், சுயதொழில் முனைவோராக ஆகவேண்டும் என்ற விருப்பமுள்ள திருநங்கைகளுக்கு அவர்கள் தேவையறிந்து அவர்களுக்கு என்னென்ன சேவை தேவையோ அவைகளை பூர்த்தி செய்து அவர்களை வெற்றி பெரும் தொழில் முனைவோராக ஆக்குவதே இந்த திருநங்கை தொழில் மேம்பாட்டு மையத்தின் நோக்கம் என்று கூறினார்.

இவ்விழாவில் முனைவர். செந்தில்குமார், வணிக மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் மேலும் பத்மாவதி வசந்தன் COROAT நிர்வாக அறங்காவலர் ஒருங்கிணைந்து திருநங்கைகளுக்கு இந்த வணிக மேம்பாட்டு மையத்தின் வழியாக உங்களது தொழிலை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார். உணவு தொழில் உள்ள வாய்ப்புகள் மற்றும் அதனின் தேவைகளை பற்றி வணிக மேம்பாட்டு மையத்தின் மேலாளர் சரவணன் விளக்கம் அளித்தனர்.

இறுதியாக முதன்மை செயல் அதிகாரி சந்தோஷ் நன்றி கூறினார். விழாவில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொழில்முனைவோராக ஆக வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள திருநங்கைகள் பலரும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.