Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காருகுடி அரசு உயர்நிலை பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

0

'- Advertisement -

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தலைமை ஆசிரியர் கீதா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அவர் ஆற்றிய குடியரசு தினஉரையில் “”நலமான வாழ்விற்கு இயற்கையும் வளமான பாரதத்திற்கு ஒற்றுமையும் அவசியம்”” என்று எடுத்துரைத்தார்.

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக நேச்சர் பவுண்டேஷன்
( Nature Foundation) நிர்வாக இயக்குனர் னோஜ் கலந்துகொண்டு ஒற்றுமையின் அவசியம் பற்றியும் இயற்கையோடு இணைந்து வாழ மரக்கன்றுகள் நட வேண்டியதன் இன்றியமையாமை பற்றியும் எடுத்துரைத்தார்..

மேலும் மாணவர்களுக்கு முகக் கவசம் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கினார்.

பின்னர் பள்ளியின் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டு அனைவருக்கும் இனிப்பு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சித்ரா, தண்டபாணி, தினேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

முடிவில் ஆசிரியை நிர்மலா நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.