Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனர் உதயமூர்த்தியின் 9வது நினைவஞ்சலி திருச்சியில் நடைபெற்றது.

0

 

தன்னம்பிக்கை நயாகனுக்கு நினைஞ்சலி

எழுச்சிமிகு எழுத்தால்
ஆயிரமாயிரம் இளைஞர்களை வழி நடத்தியவர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் 9வது நினைஞ்சலி திருச்சி நடந்தது.

மக்கள் சக்தி இயக்க நிறுவனர், சிந்தனையாளர் , எழுத்தாளருமான டாக்டர் எம். எஸ்.உதயமூர்த்தி அவர்களின் 9வது நினைஞ்சலி பொன்மலையில் நடந்தது.

இந்த மண்ணில் எத்தனையோ மாமனிதர்கள் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட சிலரின் வாழ்கையே ஒரு செய்தியாகவும், மற்ற சிலர் தங்களின் எழுத்து பேச்சு
போன்றவற்றை அடுத்தடுத்த சந்ததியினருக்கு தங்களின் செய்தியாக விட்டு சென்றிருப்பார்கள்.
இதில் வெகு சிலரே தங்களின் வாழ்க்கை அனுபவத்தை வாழ்ந்த எழுத்துகளாவும் செயல்களாலும் செய்து காட்டி அதை செய்தியாக அடுத்த தலைமுறைக்கு வைத்து விட்டு சென்றிருப்பார்கள்.

அதாவது தன் வாழ்க்கையையே சோதனைச் சாதனையாக மாற்றி தாம் மற்றவர்களுக்கு சொல்லவந்த விஷயத்தை தன் சொந்த வாழ்க்கையில் செயல்படுத்திய பிறகு அதை பெரும் செய்தியாக சொத்தாக அடுத்த தலைமுறைக்கு வைத்து விட்டு சென்றிருப்பார்கள்.

தன்னை ஆசிரியராக,
தொழிலதிபராக செல்வந்தராக எழுத்தாளராக, நிலைநிறுத்தி கொண்டு அதில் தன் வாழ்க்கை அனுபவங்களை சமூக அக்கறையுடன் அடுத்த தலைமுறைக்கு விட்டு சென்ற மாமனிதர்.

சமுக அமைப்பின் அவலங்களை கண்டு மனம் வருந்தி நல்ல எண்ணம் கொண்ட பலரை
உள்ளடக்கி நம்புங்கள்! நம்மால் முடியும்!!
நம்மால் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும்!!! என கூறியவர்
“மக்கள் சக்தி இயக்கம்” நிறுவனர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் இன்று.
அவர் விதைத்த எண்ணங்களை அவரின் விழுதுகளாக நாம் மக்களிடம் எடுத்துச் சென்று, சமுதாய மாற்றத்திற்கு
வழிகோல வேண்டும்.
இது நமது சமுதாய கடமை என்பதைவிட சமூக பொறுப்பு என்று எண்ணுகிறேன்.
அவர் நினைவாக இன்று மீண்டும் உறுதி ஏற்போம்.

அவர் கண்ட கனவாக “தனிமனித மன மாற்றம் அதன் மூலம் நல்லதொரு சமுதாய மாற்றம் அதன் வழியாக தூய்மையான அரசியல் மாற்றம்”
என்ற ஒற்றை குறிக்கோளில் ஒருங்கிணைந்து செயல்பட அனைவரும் ஏற்போம்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர்
கே.சி.நீலமேகம், திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, ராஜா, ஜீவா, வெங்கடேஷ் ,சதீஷ்குமார், நாகராஜ், சிவகாமி, சீனிவாசன் மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள் .

Leave A Reply

Your email address will not be published.