அரியலூர் மாணவி இறப்பு குறித்து
விசாரிக்க கணிஷன் அமைக்க வேண்டும் .
ஏபிவிபி மாணவர் அமைப்பு வலியுறுத்தல்.
இது குறித்து அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ பி வி பி) மாணவர் அமைப்பின் தென் தமிழக மாநில செயலாளர் சுசீலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மதம் மாறச் சொல்லி துன்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் , கிராமத்தைச் சேர்ந்த மாணவி சு.லாவண்யா (வயது17). இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் செயல்படும் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்தார் . படிப்பில் சிறந்து விளங்கிய இம்மாணவி , 10ம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றதாகக் கூறப்படுகிறது.
லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறும்படியும் அவ்வாறு, மாறினால் அவரது மேற்படிப்புச் செலவு முழுவதையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். எனினும் ஆசை வார்த்தைக்கு மயங்காத லாவண்யா மதம் மாறுவற்கு மறுத்துவிட்டார். எனவே லாவண்யாவின் பெற்றோரையும் அழைத்து அதேபோல ஆசைவார்த்தை கூறியுள்ளது பள்ளி நிர்வாகம் . லாவண்யாவின் பெற்றோரும் மதம் மாற மறுத்து விட்டனர்.
எனவே அப்போதிருந்தே அந்த பள்ளி நிர்வாகத்தினர் லாவண்யாவை துன்புறுத்த தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் , நிகழாண்டு 12ம் வகுப்பு படித்து வந்த லாவண்யாவை பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு கூட வீட்டுக்கு அனுப்ப மறுத்திருக்கிறது பள்ளி நிர்வாகம் . மேலும் , பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்வது , விடுதியை சுத்தம் செய்வது , உணவு சமைப்பது , பாத்திரங்கள் கழுவுவது , தோட்ட வேலை செய்வது என பல்வேறு வேலைகளை செய்யுமாறு லாவண்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனால் மனம் வெறுத்துப் போன மாணவி லாவண்யா , கடந்த 9 ஆ ம் தேதி தோட்டத்தில் செடிகளுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயக்கமடைந்த லாவண்யாவை , அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டியுள்ளனர் விடுதி கண்காணிப்பாளர்கள். பின்னர் , அவரது பெற்றோரை வரவழைத்த பள்ளி நிர்வாகம் , லாவண்யா விஷம் குடித்த விஷயத்தை மறைத்து , சாதாரணமாக உடல் நலமில்லாமல் இருப்பதாகக் கூறி , மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். மாணவியும் பயந்து உண்மையைக் கூறவில்லை.
ஆனால் , வீட்டுக்கு சென்ற பிறகும் லாவண்யா தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். எனவே, பெற்றோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லாவண்யாவை சேர்த்துள்ளனர். அப்போதுதான் லாவண்யா விஷம் குடித்த விஷயமே பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது .
மருத்துவமனையில் லாவண்யா அளித்த வாக்குமூலத்தில் , பள்ளி நிர்வாகத்தினர் தனது முன்னிலையிலேயே தனது பெற்றோரிடம் மதம் மாறும்படி வலியுறுத்தியதாகவும் , மதம் மாற மறுத்துவிட்டதால் தன்னை ரேச்செல் மேரி என்ற கன்னியாஸ்திரி கொடுமைப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார் . மதம் மாறச் சொல்லி லாவண்யாவை துன்புறுத்திய பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஏபிவிபி தேசிய மாணவர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மாணவி மரணம் தொடர்பான விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் . மாணவியை இழந்து வாடும் குடும்பத்தாருக் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் . இறப்பிற்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் . விடுதி மாணவர்களை முழுமையாக விசாரணை செய்தால் மதமாற்றக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வரும்.
ஆகவே , அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.