Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கேள்வி.

0

 

மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? வழக்கறிஞர் மகேஸ்வரி வையாபுரி கேள்ளி .

மாநகராட்சி சொத்தை சேதப்படுத்தி வாகன நிறுத்தம்.

வாகனத்தை பறிமுதல் செய்யுமா ?
மாநகராட்சி நிர்வாகம்.

திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், வார்டு , 23, “தியாகி” T.S. அருணாச்சலம் பிள்ளை காலனி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புடைய இடம் உள்ளது.

அந்த இடத்தை பல நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலையில் ஆக்கிரமிப்பாளர் இடத்திலிருந்து மீட்டெடுத்து மாநகராட்சி சார்பில் வேலி அமைத்து மாநகராட்சி வசம் இருந்த இடத்தை தற்போது ஒரு சில ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் மாநகராட்சி சொத்தை அபகரிக்கும் நோக்குடன் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட வேலியை அகற்றி அந்த இடத்தில் மண்மேடு அமைத்து முதல் கட்டமாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் வாகன நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

மாநகராட்சி சொத்தை சேதப்படுத்தி அபகரிக்கும் ஆக்கிரமிப்பாளர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

( வாகனம் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் குடியிருக்கும் வீடு மாநகராட்சி இடம் என அப அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.)

மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான தடுப்பு வேலியை அகற்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாநகராட்சி நிர்வாகம் செத்தை பாதுகாத்துக் கொள்ளுமா ?
ஆக்கிரமிப்பாளர் பிடியிலிருந்து மீட்டு அந்த இடத்தில் திருமண மண்டபம் அல்லது மக்கள் பயன்படும் வகையில் மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

என இந்து திருக்கோயில் மீட்பு இயக்க நிறுவனரும், வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.