திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் மரியநாதபுரம் செட்டிகுளத்தை மீன் குத்தகை எடுத்து உள்ளார்.
இவருடைய மகன் ராகேஷ் குமார்(வயது 26) . இவர் நேற்று இரவு 1.30 மணி அளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் அவரை சுட்டனர்.
அதில் படுகாயமடைந்த அவரை நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தடயங்கள் சேகரித்து வருகின்றனர்.