செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம்,ராயல் பேர்ல் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் இரட்டைவாய்க்கால் செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம் சார்பில் ராயல் பேர்ல் மருத்துவமனையுடன் இணைந்து காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவ பரிசோதனை இலவச முகாம் நடைபெற்றது.
செல்வா நகர் ஒருங்கிணைந்த குடியிருப்போர் நல சங்கம் ஒருங்கிணைப்பாளர்
அகிலன் தலைமையில்,
ஜார்ஜ் பெர்னன்ஸ் முன்னிலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் டாக்டர்கள் சத்யநாராயணன், அஷ்ரிதா, ஜானகிராமன் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு ஏழை,எளிய மக்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்து, இலவசமாக மருந்துகளை வழங்கினார்,
இம்முகாமில் செல்வா நகர் ஒருங்கிணைந்து குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தட்சிணாமூர்த்தி, பிரபு, சரவணன், தவமணி,
முருகானந்தம் உள்ளிட்டோர் இலவச முகாமில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த இலவச முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.