திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த
வாலிபர் கைது .
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்து ‘இவரது மகன் செந்தில் முருகன்.( வயது 38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .
நேற்று இவர் திருச்சி இரட்டமலை கோவில் செல்லும் வழியில் திருச்சி- திண்டுக்கல் சாலை காவேரி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து செந்தில்முருகன் எடமலைப்பட்டிபுதூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, இச்சம்பவம் தொடர்பாக தங்கமுத்து என்ற வாலிபரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மேல பஞ்சப்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து பணம் ரூ. 2,100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.