திருச்சியில் அரை மொட்டை தலையுடன் போராட்டத்தை தொடங்கினார் அய்யாக்கண்ணு. டெல்லி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு எதிரொலி.
திருச்சியில் அரை மொட்டை தலையுடன் போராட்டத்தை தொடங்கினார் அய்யாக்கண்ணு. டெல்லி செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு எதிரொலி.
டெல்லியில் 26, 27 ஆகிய நாட்களில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு இன்று ரயில் மூலம் டெல்லி புறப்பட இருந்தார்.
அவருடன் 500 விவசாயிகள் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது.

அவர்கள் டில்லியில் அரை மொட்டை தலையுடன் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாகண்ணு வீட்டிற்கு சென்று ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் வீட்டிலேயே சிறை வைத்தனர் .
மேலும் திருச்சி ஜங்ஷன் சுற்றிலும் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஜங்ஷன் பகுதி மட்டுமல்லாமல் மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா குட்செட் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்,
மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. வீட்டுக்காவலில் அய்யாகண்ணு வைத்ததன் காரணமாக அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் இங்கேயே அரை மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.