பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்கள் தர்ணா போராட்டம்.
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்தும் ,
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாதுகாப்பு குழு சார்பில் திருச்சியில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
திருச்சி கன்டோன்மென்ட் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட அலுவலகம் முன்பு கூட்டுக் குழுவின் சார்பாக நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.
இதில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் தலைவர்கள் , ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் 4 அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ,
முகவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் ,
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் 100 சதவீத பங்குகளை தனியாருக்கு ,
அந்நிய கம்பெனிகளுக்கு விற்பனை செய்திட முடிவு செய்துள்ள மத்திய அரசு அதற்கு ஏதுவாக இன்சூரன்ஸ் தேசிய மைய சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது .
இந்த திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.

