தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அடாத மழையிலும் விடாத உண்ணாவிரத போராட்டம் .
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அடாத மழையிலும் விடாத உண்ணாவிரத போராட்டம் .
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் 46 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருபத்தி எட்டாம் நாளான இன்று மரத்திலும், வீட்டு சுற்றுச்சுவர்களிலும் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் கரூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள மலர் சாலையில் 12.10.2021 முதல் 26.11.2021 வரை 46 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து,

28ம் நாளான இன்று மத்திய மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல்,
மோடி விவசாயிகளை காவல்துறையை விட்டு கைது செய்யாமல் இருக்க மரத்தின் மீதும்,வீட்டுக்காவலில் உள்ள சுற்று சுவர்களிலும் அமர்ந்து அடாத மழையிலும்
விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மாநில துணை தலைவர்கள், மேகராஜன்,
தட்சிணாமூர்த்தி,
பரமசிவம்,மாநில செயலாளர்கள் ஜான் மில்கியராஜ்,தியாகு
மற்றும்
பெரியசாமி,
சுபையா,
மண்டையோடு ராஜேந்திரன் , சிந்தாமணி செல்வம்,
தெய்வானை,
குணசேகர்,
கண்ணுசாமி,
கிருஷ்ணமூர்த்தி,
மாயவன்,
ராஜேந்திரன்,
கவியரசு,
ராஜா, நீலகண்டன்,தங்கராசு,ஜெகதீசன்,
சுரேஷ்குமார்,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செய்தி தொடர்பாளர் பிரேம்குமார்,பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.