கனமழை காரணமாக திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .
கனமழை காரணமாக திருச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை .
குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கரூர் ஆகிய 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.