காருகுடி அரசு பள்ளியில் பாதுகாப்பும் பண்டிகையையும், விழிப்புணர்வு நிகழ்ச்சி
காருகுடி அரசு பள்ளியில் பாதுகாப்பும் பண்டிகையையும், விழிப்புணர்வு நிகழ்ச்சி
“பாதுகாப்பும் பண்டிகையும்” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தா.பேட்டை வட்டார வள மைய மேற்பார்வையாளர் சசிகுமார் அவர்கள் தலைமை ஏற்றார்.
அவர் தனது தலைமையுரையில் பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் கூடுவதால் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது .எனவே தனிமனித பாதுகாப்பை உறுதி செய்வது நமது சமுதாய கடமையாகும் என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பதும் மத்தாப்புகள் கொளுத்துவதும் நமது வழக்கமாக இருக்கிறது. பட்டாசு வெடிப்பது குறித்த முறையான வழிகாட்டுதல் இன்றியும் பாதுகாப்பு இல்லாமலும் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிருக்கும் உடைமைக்கும் சேதம் ஏற்படக்கூடும்.

எனவே, அனைவரும் பாதுகாப்பாக பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட பட்டாசு மாதிரிகள் நிகழ்ச்சியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக அவற்றை வெடிக்கும் விதம் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் கீதா முன்னிலை வகித்தார். ஆசிரியர் சித்ரா வரவேற்புரையாற்றினார்.ஆசிரியர் தண்டபாணி சிறப்புரையாற்றினார் .
ஆசிரியர் நிர்மலா நன்றியுரை கூற விழிப்புணர்வுக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.