எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பில் 120 ஏழைக் குழந்தைகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்.
எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பில் 120 ஏழைக் குழந்தைகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள்.
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட எய்ம் டூ ஹை அமைப்பின் சார்பாக திருச்சி புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில், டிரஸ்டின் நிறுவனர் இரா.மோகன்
தலைமையில் 120 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு மற்றும் காரம் கொடுத்து அவர்களுடன் மதிய அசைவ உணவு உண்டு தீபாவளியை கொண்டாடினர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்கள் கலந்து கொண்டு,
கொரோனா என்கிற கொடிய நோய் உலகெங்கும் பாதிக்கபட்ட நிலையில் இந்த வருட தீபாவளிக்கு புத்தாடை எடுக்ககூட வழி இல்லாத 120க்கும் மேற்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் காரம் ஆகியன கொடுத்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் திருச்சி ஜி. விசுவநாதம் மருத்துவமனை டாக்டர். ஜெயபால் அவர்கள் கலந்து கொண்டாடு ஏழை எளிய குழந்தைகளுக்கு தனது சிலம்ப விளையாட்டுகளை விளையாடி காண்பித்து மகிழ்வித்த உலக சிலம்ப இளைஞர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சிலம்ப கோர்வை கழக சிலம்ப மாணவர்களின் கலை நிகழ்ச்சி காட்சி விளையாட்டுகளை பாராட்டி பரிசுகளை அளித்து பாராட்டினார்கள்.
விழாவில் நாகப்பா கார்பரேஷன் இயக்குனர் ரவிராமசாமி, கிருஷ்னாலயம் ரவிச்சந்திரன், கிராம விடியல் வங்கி மேனேஜர் ரெத்னகுமார் மற்றும் எய்ம் டூ ஹை டிரஸ்டின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திருச்சி எட்டரை நண்பர்கள் குழு, பொருளாளர் கணேஷ், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.
முடிவில் ஊனையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சை.சற்குணன் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.