திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.
திருச்சி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.
பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் ஆர்சி மேல்நிலைப்பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் குழந்தை வன்கொடுமை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலாவதாக மாணவர்களுக்கு ‘விளையாட்டு பொம்மைகளாகும் இன்றைய குழந்தைகள்’ என்னும் தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
பின்னர் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அருட்பணி சின்னப்பன் அடிகளார் தலைமை தாங்க, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சகாயராஜ் முன்னிலை வைத்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆலோசகர் முனைவர். எஸ். பரமேஸ்வரி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழிப்புணர்வு குழந்தைகளுக்கான பாலியல் வன்கொடுமை பற்றிய கருத்துகளை கூறி விளக்க உரையாற்றினார்.
அப்போது பாலியல் வன்கொடுமை
பதின்பருவத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேற்கொள்வது மற்றும் இணையத்தில் அடிமையாதல் பற்றிய விழிப்புணர்வுகள் மாணவர்களிடையே ஏற்படுவது பற்றி விளக்கிக் கூறினார்.
இந்நிகழ்வில் ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணித்துறை மாணவர்கள் சஞ்சய், மோனிகா, பிரஸ் எஸ்தர், மிர்த்தின்குமார், சுந்தர் ராஜ் ஆல்வின், கேத்தரின் ஷாரோன் பியூலா மற்றும் பேராசிரியர் முனைவர். கார்ட்டர் பிரேம் ராஜ் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து சிறந்த முறையில் நடத்தினர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மாணவர்கள் சமூக இடைவெளி பின்பற்றி அமர வைக்கப்பட்டனர்.
பள்ளியின் ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.