அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வேண்டுகோள்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வேண்டுகோள்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுமாறு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வேண்டுகோள்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
அதிமுக நிறுவனத்தலைவர் மக்கள் திலகம் புரட்சித்தலைவர்
எம்ஜிஆர் அவர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டு,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்டிகாக்கபட்ட மாபெரும் பேரியக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகளை கடந்து 17-10-2021 ஞாயிற்றுகிழமை அன்று பொன்விழா காண இருக்கும் இத்திருநாளை கொண்டாடும் விதமாக மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட கழகம் மற்றும் சார்பு அணிகள் சார்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருவுருவச் சிலைகளுக்கும் மற்றும் அவர்களது படங்களுக்கும் மாலை அணிவித்தும்,

அதேபோல் ஆங்காங்கே கழகக் கொடியினை ஏற்றி வைத்து விழா கோலம் பூண்டு இனிப்புகள்
வழங்கி சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
என அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.