ஊரக உள்ளாட்சி தேர்தல்:துறையூருக்கு வருகை புரிந்த அமைப்பு செயலாளர் தங்கமணிக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பான வரவேற்பு
ஊரக உள்ளாட்சி தேர்தல்:துறையூருக்கு வருகை புரிந்த அமைப்பு செயலாளர் தங்கமணிக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பான வரவேற்பு
அதிமுக அமைப்பு செயலாளரும் நாமக்கல் மாவட்ட செயலாளரும் முன்னாள் மின்துறை அமைச்சருமான பி.தங்கமணி திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்,துறையூர் ஒன்றியம், 13வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அபிராமி சேகரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
முன்னதாக துறையூர் வருகைதந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி, என்.ஆர்.சிவபதி, டி.பி.பூனாட்சி,
ப.அண்ணாவி,
முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள்
மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் செல்வராசு,இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன்,மாவட்ட அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ) சுப்ரமணியன், மற்றும்
மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர்,வார்டு, ஊராட்சி,கிளை மற்றும் மகளிர்,சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.