திருச்சி அருகே குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர் கோயில், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு கோயில் உள்ளது.
இந்தக் கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வுகள் யாக சாலையில் இருந்து கடம் எடுத்து வரப்பட்டு கோயிலை சுற்றிவந்து, மூலவரின் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஏற்பட்டது.
ஏனைய பரிவார கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
சிறப்பு அலங்காரமும் மகா தீபாரதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்துகொள்ள இன்று குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து இரவு வானவேடிக்கை நிகழ்ச்சியும்
நாளை 17ம் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜை நடைபெறுகிறது.