திருச்சி மாவட்ட சமுக நலத்துறையில் எங்கே சமுக நலன்….?? வழக்கறிஞர் கிஷோர் குமார் கேள்வி.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடந்த வந்தோம் என்ற பாரதியின் கவிதை வைர வரிகளின் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், பெண்கள் குடும்ப ரீதியாக பாதிப்பிற்குள்ளாகும் பொழுது அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, சட்டரீதியாக உதவ தமிழகத்தில் சமுக நலத்துறைக்கு என தனி அமைச்சரகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்பார்வையில் தனி அதிகாரியால் செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் குடும்ப பெண்களுக்கு எதிரான மிக பெரிய அநீதி என்றால் அது கணவர் மற்றும் அவரை சார்ந்தவர்களால் பெண்களுக்கு ஏற்படும் வரதட்சனை கொடுமை தான். இதனை தடுக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு விரைவு படுத்தபட்டன. ஆனால் இதுவே நாளடைவில் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க பயன்படுத்தபட்ட காரணத்தினால், நீதிமன்றங்கள் வரதட்சனை கொடுமை தொடர்பான புகாரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல்_மேற்படி புகாரை மாவட்ட சமுக நலத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
இந்த புகாரில் இரு தரப்பினரையும் அழைத்து பேசி ஆலோசனை வழங்கி_சட்ட ரீதியாக பெண்களுக்கு உதவுவது தான் சமுக நலத்துறையின் தலையாய பணி.
ஆனால் இன்று திருச்சி மாவட்ட சமுக நலத்துறையில் புகார் கொடுக்கும் கணவரோ அல்லது மனைவியோ சேர்ந்து வாழ்ந்துவிடலாம் என நம்பி மனு கொடுத்தால். மேற்படி குடும்ப உறவுகளில் அனுபவமே இல்லாத, திருமணமே ஆகாத, தற்காலிக ஊழியர்களின் “கவுன்சிலிங்” என்ற பொறுப்பற்ற விசாரணை முறையினால் கணவர் மற்றும் மனைவி இருவரிடமிருந்த விரிசல் பெரிதாகி இனி வரும் காலங்களில் இருவரும் சேர்ந்து வாழவே முடியாத அளவிற்கான சூழல் அதிகரித்து விடுகின்றன என்பதை நம்மால் கண்கூடாக உணர முடிந்தது.
அதுவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமினுக்கு செல்லும் கணவர் தரப்பினருக்கு நீதிமன்றம் மேற்படி குடும்ப பிரச்சினையை திருச்சி மாவட்ட சமுக நலத்துறை விசாரித்து கணவன் மற்றும் மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்க உத்தரவிடுகிறது. இந்த உத்தரவுபடி திருச்சி மாவட்ட சமுக நலத்துறையில் கவுன்சிலிங் கொடுப்பது யார் தெரியுமா..?
திருமணமே ஆகாத 27வயது நிரம்பிய பெண்கள்.
கவுன்சிலிங் கொடுப்பதிற்கு வயது ஒரு பொருட்டல்ல தான். ஆனால் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல அனுபவம் வேண்டாமா..? இந்த அனுபவமே இல்லாத தற்காலிக அலுவலர்களால் குடும்ப பிரச்சினைகள் பெரிதாக்கப்பட்டு தினம், தினம் குஸ்தி தான் நடக்கிறது திருச்சி மாவட்ட சமுக நலத்துறை அலுவலகத்தில். இந்த குஸ்தி தாங்க முடியாமல் கண்டோன்மென்ட் காவல் நிலையங்களில் சமுக நல அலுவலரே இரு தரப்பினர் மீது புகார் கொடுக்கும் சூழல் அதிமாவது வேதனை.
எனவே தமிழக சமுகநலத்துறை அமைச்சர் அவர்களும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களும் திருச்சி மாவட்ட சமுக நலத்துறையில் தம்பினருக்கு கவுன்சிலிங் கொடுக்கும் முறையை ஆய்வு செய்து_மேற்படி கவுன்சிலிங் கொடுக்கும் அலுவலர்களுக்கு போதிய சட்ட அறிவுடன், குடும்ப ரீதியான அனுபவ அறிவுலுள்ளவராக அதிகாரிகளை நியமித்து பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் நல் மய்யமாக மாற்ற தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
மக்கள் நீதி மய்ய மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர்
S.R.கிஷோர்குமார்.