Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இம்மானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு நினைவுதினம். உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.

0

'- Advertisement -

திருச்சியில்
இமானுவேல் சேகரன் உருவபடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி.

2 இடங்களில் சிலை அமைக்க கோரிக்கை.


திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

 

அவரிடம் 2 இடங்களில் சிலை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

திருச்சி ஏர்போர்ட் எதிரே உள்ள வயர்லஸ் சாலை விஜய் மகாலில் தியாகி இமானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

தேவேந்திர குல வேளாளர்கள் பேரமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு தலைவர் ம.அய்யப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் முன்னிலை வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில இளைஞரணி அமைப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரிடம் திருச்சியில், இமானுவேல் சேகரன் உருவச் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., டெல்லி அரசு பிரதிநிதி ஏ.கே. எஸ். விஜயன், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ், திருச்சி மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள வி.வி.கிரீஸ் மஹாலில் இமானுவேல் சேகரன் 64-ம் ஆண்டு வீரவணக்க தினம் கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் பொன். முருகேசன் தலைமை தாங்கினார்.

உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வணங்கினார்.

அப்போது அவருக்கு செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன் (திருச்சி), சரத் பாண்டியன் (புதுக்கோட்டை), முருகன் (கரூர்), தேசிய செயலாளர் துரை.அறிவுக்கரசன், பொருளாளர் பொன்.ரங்கராஜ், மாநில இளைஞரணி தலைவர் ஓவியர் ஜெயராஜ், செயலாளர் புதியவன், மாநில செய்தி தொடர்பாளர் வடிவேல் மற்றும் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும், திருவெறும்பூர் தொகுதியில் இமானுவேல்சேகரன் உருவச் சிலை நிறுவ வேண்டும்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.