முதியோர் இல்லம், பெண்கள் & குழந்தைகள் நல காப்பகம் தொடக்க விழா.
திருச்சி No 1 டோல்கேட் பகுதியில் ஸ்ரீ – வ்ருத்தாஸ்ரம் சார்பில் முதியோர் இல்லம் – பெண்கள் & குழந்தைகள் நல காப்பகம் தொடக்க விழா நடைப்பெற்றது.
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் நிறுவனர் கிருஷ்ணன் தலைமையில் , மனநல மருத்துவர் ஆருத்ரா கோபாலகிருஷ்ணன், மருத்துவர் சுஜீதா சந்திரபாபு , மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், மாவட்ட செயலாளர் இரா.இளங்கோ, ஆர்.கே.ராஜா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
விழாவை தண்ணீர் அமைப்பு செயலாளரும் , கலைக்காவிரி கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியருமான கி.சதீஸ்குமார் தொகுத்து வரவேற்புரையாற்றினார்.
விழாவிற்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரை :
திருச்சி மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுனிஷா , பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா , திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அனிதா , காவல் ஆய்வாளர் த பொன்ராஜ் ஆகியோர் சிறப்புரை யாற்றி வாழ்த்துரை யாற்றினார்கள்.
விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு 30 பேருக்கு ஒரு மாதத்திற்க்கான மளிகை சாமான்கள் வழங்கப்பட்டது.
இதில் மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக பிளாஸ்டிக் கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம் என விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது .
முடிவில் கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.