விஜயகாந்த் பூரண நலத்துடன் துபாயிலிருந்து வீடு திரும்ப வேண்டி திருச்சி மாவட்டத் துணைச் செயலாளர் ப்ரீத்தா விஜயானந்த் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் விஜயகாந்த் அவர்கள் துபாயிலிருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்
என திருச்சி பொன்மலைப்பட்டி புதுபாலம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட துணை செயலாளர் ப்ரீத்தா விஜயானந்த் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு
மாநகர் மாவட்ட செயலாளர் டிவி கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஐயப்பன், மாநில தொண்டரணி துணை செயலாளர் சாகுல் ஹமீது, மாநில தொழிற்சங்க பேரவை தலைவர் திருப்பதி, மாவட்ட பொருளாளர் மில்டன் குமார்,
செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பெருமாள், காளியப்பன், லோகராஜ், பகுதி செயலாளர்கள் வெங்கடேசன், சாத்தனூர் குமார் மற்றும்
அணி நிர்வாகிகள் மணி, அருள்ராஜ், கேபிள் ஆபிரகாம், சந்திரன், இமானுவேல், கோபால் , அலெக்சாண்டர் , உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த வேண்டுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.