*காவல் துறை அதிகாரி சபியா படு கொலை – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்.*
காவல் துறை அதிகாரி சபியா படு கொலைக்கு முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தலைநகர் டெல்லியில் காவல்துறை பாதுகாப்புப் துறையில் சேர்ந்து சில நாட்களே ஆன சபியா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டதை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
பணிக்குச் சென்ற காவல் துறை அதிகாரி சபியா என்கிற பெண் மனிதமிருகங்களால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
சபியாவை ஈவ்வறக்கமின்றி மிகவும் கொடூரமான முறையில் படு கொலை செய்த நபர்களை காவல் துறை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டனைக்கு உள்ளாக்க பட வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது .
சபியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
மேலும் உயிரிழந்துள்ள சபியா குடும்பத்திற்கு இழப்பிடு ரூ 2 கோடி வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும் என அம்மாநில அரசை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
- எனவே தினசரி பெண்கள் மீதான பாலியல் மற்றும் படு கொலை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளன . பெண்கள் மீதான பாலியல், மற்றும் படு கொலைகளை ஈவ்வறக்கமின்றி செய்வோர்கள் மீது எந்த வித பாரம் பட்சம் பார்க்காமல் இந்த கொடூர கொலையில் சம்பந்த நபர்களை மத்திய , மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.l