வ.உ.சியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது உருவ சிலைக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை.
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்தசெம்மல்
வ.உசிதம்பரனார் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு
இன்று திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உசிதம்பரனார் திருவுருவ படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருச்சி கண்டோன்மென்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் இந்நிகழ்வில் கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர்
கே என் சேகரன் , கோவிந்தராஜன். வன்னை அரங்கநாதன் செந்தில் கே எஸ் எம் கருணாநிதி நகரக் கழகச் செயலாளர் மைக்கில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மதிவாணன், பேரூர் கழக செயலாளர் கருப்பையா மற்றும் மாவட்ட. ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.