திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பாக 75வது இந்திய சுதந்திரதின பவளவிழா, அன்னை தெரசா பிறந்த நாள் விழா மற்றும் ஜே.கே.சி. நிறுவனர் பா. ஜான்ராஜ்குமார் 58வது பிறந்த நாள் நலதிட்ட உதவிகள் விருது வழங்கும் விழா நிறுவனர் தலைவர் ஐ.சி.எப்.பேராயர், பா. ஜான்ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
வழக்கறிஞர் சி.பி ரமேஷ் ஆடிட்டர் எம். ரிச்சர்டு, யுகேஆர் புரமோட்டர்ஸின் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ்.ரஞ்சித் குமார், பாஸ்டர் ஏ.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். கே.எஸ்.சுப்பையா பாண்டியன், வசந்தம் லயன் கிளப் தலைவர் டி.ஜி. ஆர்.. வசந்த குமார் பேராசிரியர் பி. ரவிசங்கர்(கெளரவத் தலைவர்) ஆயர் டேவிட் பரமானந்தம், ரவி. கமல், மதன், ஆனந்தராஜ், சந்தான கிருஷ்ணன் ஆசிரியர், அலெக்சாண்டார்,
ஸ்ரீரங்கம் தமிழ்ச்சங்கம் தலைவர், பால் ஜெயகுமார், ஜனாப்.காலிக்பாய்,
ரெஜினா, பாத்திமா,நூர்ஜஹான். ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிஷப் ஹீபர் கல்லூரி போராசிரியர் அருள் வரவேற்பு ஆற்றினார்.
முடிவில் ஜே.கே.சி. மகளிர் மேம்பாட்டு மையத்தலைவி எம். சகுந்தலா நன்றி கூறினார்.
நலதிட்ட உதவிகள் மற்றும் அன்னை தெரசா விருதுகள் வழங்கப்பட்டது.