திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் செக்போஸ்ட் அருகே உள்ள ஆர்சிஎஸ் தோட்டம் உள்ள இடத்தின் அருகில் மனித மண்டை ஓடுகள்,மற்றும் கை கால் எலும்புகள் ரோட்டின் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகில் மேலும் ஒரு மூட்டையில் மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் பிரிக்கப்படாமல் உள்ளன.
இவை மந்திரவாதிகள் யாரேனும் பில்லி சூனியம் போன்றவர்களுக்கு உபயோகத்துக்கு வீசினார்களா?
அல்லது யாராவது கொலை செய்து அங்கு மூட்டையாக கட்டி எலும்பு கூடுகளை வீசி சென்றார்களா என தெரியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் செங்கிப்பட்டி அருகே இதேபோன்று மண்டை ஓடுகளும் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த எலும்புக் கூடுகள் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை அதற்குள் திருச்சியில் இப்படி ஒரு நிகழ்ச்சி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.