Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அருகே இன்று காலை செல்போன் பேசிக்கொண்டுஅரசு பஸ் ஓட்டிய டிரைவரால் விபத்து- ராணுவ வாகனம் மீது மோதல்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

0

'- Advertisement -

திருச்சி அருகே இன்று காலை  செல்போன் பேசிக்கொண்டுஅரசு பஸ் ஓட்டிய டிரைவரால் விபத்து- ராணுவ வாகனம் மீது மோதல்.ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு

Ad banner

ராணுவ வீரர்கள் உயிர்த்தப்பினர்,டிரைவர் காயம்

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அல்லூர் அருகே அரசு பேருந்தும், ராணுவ வேனும் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். டிரைவர் காயம் அடைந்தார்.

 

இன்று காலை நடந்த விபத்து சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-

 

 

பெங்களூரு ராணுவ முகாமை சேர்ந்த நாயர் கோபால் தலைமையிலான ஐம்பதுக்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் கடந்த பத்தாம் தேதி முதல் திருச்சி அருகே உள்ள வீரமலை பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது, தொடர்ந்து இன்று காலை அனைவரும் ராணுவ வாகனங்களில் பெங்களூரு நோக்கி

இன்று காலை 7மணி அளவில் சென்று கொண்டுருந்தனர். இந்த ராணுவ வாகனம்

திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் அல்லூர் மாரியம்மன் கோவில் தெரு அருகே வந்தது.

அப்போது கோயம்புத்தூரில் இருந்து எதிர் திசையில் அரசு பேருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த கார் ஒன்றில் அரசு பஸ் எதிர்பாரா விதமாக இடித்து பின்னர் ராணுவ வாகனத்தில் வேகமாக அரசு பஸ் மோதியது.

இந்த விபத்தில் அரசு பஸ்,கார், ராணுவ வாகனத்தின் முன்பக்கமும் கடுமையாக சேதம் அடைந்தது. இந்த விபத்து சம்பவத்தை தொடர்ந்து திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த விபத்தில் ராணுவ வாகனத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இருந்த போதிலும் ராணுவ வாகன டிரைவர் கவாஸ்கர் என்பவர் காலில் மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் கவாஸ்கரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து ஜீயபுரம் காவல் நிலைய போலீசார்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் ராணுவ வேன் சிக்கிய காரணத்தால் ராணுவ அதிகாரிகள் உடனடியாக வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் உயர் அதிகாரிகள் வந்த பிறகு தான் வாகனத்தை எடுப்போம் என்று கூறினர். இதனால் திருச்சி- கரூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பிறகு ராணுவ அதிகாரிகளிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு ராணுவ வேனை அங்கிருந்து அப்புறப்படுத்த அனுமதித்தனர்.

இதையடுத்து போலீசார் விபத்தில் சிக்கிய அரசு பஸ், ராணுவ வாகனம்,கார் ஆகியவற்றை அங்கிருந்து ஓரமாக அப்புறப்படுத்தினர். பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின் முதல் கட்ட விசாரனணயில் அரசு பஸ் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டு பஸ்ஸை இயக்கியதும்,சாலையில் இருந்த வேக தடையை கவனிக்காமல் பஸ்யை இயக்கியதால் பேருந்து அவரது கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்கள் மீது மோதியதாக தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம்  காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.