இன்று திங்கட்கிழமை ( 16.11.26 ) காலை தொண்டமான் பட்டி ரயில் நிலையம் அருகே சுமார், 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.
இறந்தவரின் வலதுபுற மார்பு பகுதியில் ரங்கநாதன் என்றும் இடதுபுற மார்பில் பார்வதி என்றும் பச்சை குத்தப்பட்டுள்ளது. மேற்படி இறந்த நபரின் உடலை சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகுமாரி கைப்பற்றி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை சவக்கிடங்கிற்கு உடல்கூறாய்வுக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேற்படி நபரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் 9443472524 மற்றும் 9080563321 சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்டாலின், இருப்புப் பாதை காவல் நிலையம் திருச்சிராப்பள்ளி.

