மீண்டும் காவல்துறையினரிடம் முகக் கவசம் அணியாமல் மாட்டிக்கொண்டு கதறிய டிக் டாக் திருச்சி ரமேஷ்
திரைப்பட நடிகர் திருச்சி ரமேஷ் டிக் டாக் மூலமாக பிரபலமானவர், இவர் காமெடியாக செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக பதிவு செய்து பதிவிட்டு வருகிறார்.
அதனை பார்க்கும் மக்கள் அனைவரும் வெகுவாக ரசித்து வருகின்றனர்,
அதனால் நடிப்பதை மட்டுமே தொழிலாக வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று புதுபுது இடங்களைக் காட்டி வீடியோக்கள் பதிவு செய்து பல மொபைல் ஆப் களில் தனது நடிப்பு திறனை வெளி காட்டுகிறார்.
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார்.
கொரோனா காலத்திற்கு முன்பு திருச்சி லால்குடி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்று அபராதம் செலுத்தியதுடன் காவல்துறையின் ஒப்புதலுடன் தனது ரசிகர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவு செய்து இருந்தார் . அதேபோன்று திருச்சி கிராப்பட்டி அருகே முக கவசம் அணியாமல் சென்று காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டு திருச்சி ரமேஷ் நான் கொரோனா தடுப்பு ஊசி இரண்டு முறை செலுத்திவிட்டேன் அதனால் கொரோனா பாதிப்பு என்னை ஒன்றும் செய்யாது என்று சாமர்த்தியமாக பேசியுள்ளார்.
காவல்துறை அதிகாரி முகக் கவசம் அணிவது என்பது கட்டாயம் வெளியே வரும் அனைத்து நபர்களும் முக கவசம் அணிந்து வரவேண்டும்,
தமிழக அரசு தெரிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மூலமாக கூட மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது, எனவே அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும், எனக்கூறி அபராத தொகையை வசூலித்து கொண்ட, காவல்துறை அதிகாரி முக கவசம் அணிந்து கொண்டு தான் செல்ல வேண்டும் என முக கவசத்தை வழங்கினார் .
உடனே அதே இடத்தில் நின்றுகொண்டு டிக் டாக் புகழ் நடிகர் திருச்சி ரமேஷ் தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
பல டிக் டாக் பிரபலங்கள் சுய விளம்பரத்திற்காக சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி வரும் நிலையில், இவர் மக்களின் நலன் கருதி பல விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
தொடர்ந்து இதுபோன்ற பல விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்ய வேண்டும் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.