திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
8வது வார்டு டவுன் ஸ்டேஷன் மேல தேவதானம் ரோட்டில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கல் கொட்டி 2 மாதமாகியும், இன்று வரை தார்சாலை போடாவில்லை.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையினால் ஜல்லி கற்கள் கால்வாயில் (சாக்கடை) புகுந்து கால்வாய் அடைப்பு ஏற்பட்டு வருகிறது,
ஜல்லி கற்களில் இரு சக்கர வாகனத்தில் போகும் வாகன ஓட்டிகள் தினமும் பலர் கீழே விழுந்து சிறு சிறு காயங்களுடன் எழுந்து செல்கின்றனர்.
வயதானவர்களும், சிறுவர்களும் உள்ள இந்தப் பகுதியில் 2மாத காலமாக சாலை போடும் பணி இழுத்தடித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியின் புதிய விடியல் என கூறிக்கொள்ளும் கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்,இலக்குத் தொகையில் எந்த ஒரு பொதுமக்கள் பிரச்சனை என்றாலும் நேரடியாக வந்து அதை சரி செய்து தருவார் என அவர்களுக்கு வேண்டிய செய்தியாளர்கள் மூலம் செய்தியைப் பரப்புவார்கள்
இந்த எம்எல்ஏ விடம் பலமுறை சாலை அமைத்து தரக் கோரி எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது வேதனையான விஷயம் .
எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.