திருச்சி பிராட்டியூர் எஸ்.ஆர்.வி. பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்,ஆசிரியர்கள் திட்டியதால் எடுத்த முடிவு? சீரியஸான கண்டிஷனில் மருத்துவமனையில் ….
திருச்சி பிராட்டியூர் எஸ்.ஆர்.வி. பள்ளி மாடியில் இருந்து குதித்த பத்தாம் வகுப்பு மாணவன்,ஆசிரியர்கள் திட்டியதால் எடுத்த முடிவு?
சீரியஸான கண்டிஷனில் மருத்துவமனையில் சிகிச்சை
திருச்சி பிராட்டியூரில் செட்டிநாடு கல்வி அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு செயல்பட்டு வரும் எஸ். ஆர் வி. சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவன் நேற்று திடீரென்று பற்றி மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த மாணவன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் SRV பள்ளி மாணவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி மாநகரில் செயல்பட்டு வரும் SRV பள்ளியின் முக்கிய நிறுவனர்கள் மற்றும் கல்வி இயக்குநர்கள்:
ஏ. ராமசாமி (தலைவர்) பி. சுவாமிநாதன் (செயலாளர் ) எஸ். செல்வராஜன் (பொருளாளர் ) எம். குமாரவேல் (துணைத் தலைவர்) ஏ. ஆர். துரைசாமி (நிர்வாக அறங்காவலர்) டாக்டர் பி. சத்யமூர்த்தி (இணைச் செயலாளர் ) ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர் ..
இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவன் நேற்று புதன்கிழமை காலை திடீரென்று பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்தாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அந்த மாணவன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து
கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பள்ளி மாணவன் திடீரென்று மாடியிலிருந்து கீழே விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . பத்தாம் வகுப்பு மாணவனாக இருப்பதால் அவருக்கு படிப்பு தொடர்பாக ஆசிரியர்கள் யாராவது தொல்லை கொடுத்தார்களா அல்லது மன உளைச்சலில் பள்ளி மாணவன் மாடியிலிருந்து கீழே விழுந்தாரா என்பது தெரியவில்லை ….
இந்த சம்பவம் நாமக்கல் மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் 6 SRV பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

