தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என விவசாயிகளின்பயிர்கடன் முழுமையான தள்ளுபடி செய்வேன் எனக் கூறிய தமிழக முதல்வர் இன்று விவசாயிகளை குண்டுகட்டாக கைது செய்வது ஏன்?விவசாயிகள் வேதனை..
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என விவசாயிகளின்பயிர்கடன் முழுமையான தள்ளுபடி செய்வேன் எனக் கூறிய தமிழக முதல்வர் இன்று விவசாயிகளை குண்டுகட்டாக கைது செய்வது ஏன்? விவசாயிகள் வேதனை..
திருச்சி அருகே சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது ..
சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்றதால் பரபரப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்
போது அறிவித்த வாக்குறுதியின் படி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு எந்தவித நிபந்தனையுமின்றி முழுவதும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 55 விவசாய சங்கங்கள் இணைந்து தொடர் காத்திருப்பு போராட்டம் திருச்சியை அடுத்த சமயபுரம் அருகில் பள்ளிவிடை பகுதியில் கடந்த 15ஆம் தேதி தொடங்கி காலவரைற்ற போராட்டத்தை தொடங்கி நடத்தினார்கள்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்
5, நாட்களாக போராட்டம் நடைபெற்ற நிலையில் விவசாயிகளின் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு அமைச்சர்களை அனுப்பி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்
அமைச்சர்களின் பேச்சுவார்த்தையை அடுத்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடியும் வரை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கோரிக்கையை நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் இன்று 22ஆம் தேதி முதல் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தனர்.அதன்படி இன்று திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய ஊர்களில் இருந்து சமயபுரம் நோக்கி வர தொடங்கினர் இதனை தெரிந்து கொண்ட காவல்துறையினர் ஆங்காங்கே விவசாயிகளை வழி மறித்து அவர்களை கைது செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர் …
இதனால் பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக காவல்துறையின் கைது சம்பவத்தை கண்டித்தும், மறுபுறம் காவல்துறையைக்கொண்டு விவசாயிகள் மீது அத்துமீறலில் ஈடுபடும் தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருங்கலூர் அருகே சாலையோரத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . ஏற்கனவே அந்த இடத்தில் உண்ணாவிரத போராட்டம் விவசாயிகள் நடத்துவதாக அறிவித்து இருந்தது தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் ..
இந்நிலையில் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் வயதானவர்கள் என்று கூட பாராமல் போலீசார் தரதரவென இழுத்துச் சென்றும், குண்டுகட்டாக தூக்கிச்சென்றும் கைதுசெய்து அத்துமீறலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது மேலும் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து விவசாய சங்க தலைவர் கூறும் பொழுது
இடைத்தேர்தல் முடிந்தும் தற்போதுவரை விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமலும், கடன் தள்ளுபடி குறித்த எந்தஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை
இதனிடையே, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்கடன்களை எந்தவித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக தள்ளுபடி செய்யகோரி இன்று திருச்சி சமயபுரம் பகுதியில் 55 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் சாகும்வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் நடத்த ஏற்பாடு செய்ய இருந்தனர். இந்நிலையில் போராட்டத்திற்கு வருகை தந்த விவசாயிகளை ஆங்காங்கே போலீசாரை கொண்டு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று விவசாயிகள் கூறினர்

