தேவர் பூஜையில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்வாரா என தெரியவில்லை?திருச்சியில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அஜய் வாண்டையார் –
தேவர் பூஜையில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்வாரா என தெரியவில்லை?திருச்சியில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் அஜய் வாண்டையார் –
இன்று மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா கொண்டாடப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய இராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் தஞ்சாவூரில் இந்த விழா அரசு விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்காக தஞ்சை செல்லும் வழியில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அஜய் வாண்டையார் அறக்கட்டளை சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி அஜய் வாண்டையார் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் ‘அஜய் வாண்டையார் அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்த ஆலோசனைக்காக திருச்சியில் நிர்வாகிகளை சந்தித்துப் பேசியதுடன், தேவர் ஐயா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்குப் பிறகு தஞ்சாவூரில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தொண்டு நிறுவனத்தின் மூலமாகத் கல்வி, விளையாட்டு மற்றும் பொதுமக்களின் அவசியத் தேவைகளுக்கு உதவிகள் செய்யப்படவுள்ளன. குறிப்பாக, சில ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மோட்டார், பம்ப் மற்றும் போர்வெல் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களால் இயன்ற அனைத்து சமூக நலப் பணிகளையும் இது செய்யும். இது முழுக்க முழுக்க எங்களது தனிப்பட்ட முயற்சியாகும். அரசுக்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. மேலும், இது ஒரு தொண்டு நிறுவனமாகவே செயல்படுமே தவிர, அரசியல் கட்சியாக மாறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. 
புதிய அரசின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த நான்கு மாதங்களாக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து நல்ல முறையில் செயல்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கும் எங்களுக்கும் உள்ளது,வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ள தேவர் குருபூஜையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கலந்து கொள்வாரா என இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.இந்த நிகழ்வின் போது ஃபார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநில செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

