திருச்சியில் தவெக கூட்டணி கட்சி கவுன்சிலர் வார்டின் அவலம், 3 மாதமாக ரோட்டில் ஆறாக ஓடும் குடிதண்ணீர், பலமுறை புகார் அளித்தும் பயனில்லை பொதுமக்கள் வேதனை….
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்திற்கு உட்பட்ட 30-வது வார்டு பாய் கடை சந்தில் தினசரி மதியம் 2 மணி அளவில் பொதுமக்கள் உபயோகத்திற்காக குடி தண்ணீர் திறந்து விடப்படும் ..
கடந்த 3 மாதத்திற்கு முன் குடிதண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தினமும் மதியம் இரண்டு மணிக்கு திறக்கப்படும் இந்த குடி தண்ணீர் வெளியேறி ரோடில் ஆறு போல் வீணாக ஓடுகிறது ..
இதுகுறித்து இந்த வார்டு மதிமுக கவுன்சிலர் கதிஜா மற்றும் சம்பந்தப்பட்ட துறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை ….
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக்கழக கூட்டணி கட்சியான மதிமுக கவுன்சிலரான கதிஜா வார்டில் உள்ள இந்த அவல நிலையை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர் .. ( இந்த வார்டு மதிமுக கவுன்சிலர் கதிஜாவை இதுவரை இந்த வார்டு பொதுமக்கள் பார்த்ததே இல்லை எனவும் கூறுகின்றனர்)

