Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கி தகுதி தேர்வில் தவறிய ஆசிரியர்களின் அனுபவத்தை கணக்கிட்டு வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்

0

'- Advertisement -

வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கி தகுதி தேர்வில் தவறிய ஆசிரியர்களின் அனுபவத்தை கணக்கிட்டு  வெற்றி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்

Ad banner

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ல் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியாற்றிய அனுபவத்தின் பேரில் இரண்டு ஆண்டுக்கு ஒரு மதிப்பெண் என்ற அளவில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி அவர்களை தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

அதேபோல் அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். தமிழக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயமாக்க கூடாது என்று சிறப்பு தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. இந்த பிரச்சனையில் மத்திய அரசின் முடிவுக்கு காத்திருக்காமல் மாநில அரசால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செய்யக்கூடிய நன்மைகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.