Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழக முழுவதும் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்கப்படும் .. அமைச்சர் வெங்கடராமன் அறிவிப்பு

0

'- Advertisement -

Ad banner

தமிழகத்தில் சன்னரக அரிசி ரூ.30க்கு அமுதம் அங்காடி மூலம் விற்கப்படும் என அமைச்சர் வெங்கடராமன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் : கர்நாடகா, ஆந்திராவில் இருந்து பொன்னி அரிசியின் வரத்து குறைந்ததால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தவும் பொதுமக்களுக்கு உதவிடவும் இன்று முதல் தமிழ்நாட்டில் விளையும் உயர்தர சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு அமுதம் அங்காடி மூலம் விற்பனை செய்யப்படும்.

 

மேலும் அவர் கூறியதாவது: 2023 ல் 52 ரூபாயாக இருந்த ஒரு கிலோ அரிசி, 2024ம் ஆண்டில் 60 ரூபாய் ஆனது. 2025ம் ஆண்டில் 65 ரூபாய் ஆக உயர்ந்தது. 2022 ல் 110 ஆக இருந்த துவரம் பருப்பு விலை 2024ல் 171 ஆக உயர்ந்தது என குறிப்பிட்ட அவர் அமுதம் அங்காடிகளில் குறைந்த விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம் . துவரம் பருப்பு கிலோ 130 ரூபாய்க்கு வழங்குகிறோம்.

 

சன்ன ரக அரிசியை தான் மக்கள் அதிகாக பயன்படுத்துகின்றனர். 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரக அரிசி 250 அமுதம் அங்காடிகள் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம்.அமுதம் அங்காடிகளில் நேரடியாக வாங்கி கொள்ளலாம். கிலோ 30 ரூபாய்க்கு பெற்று கொள்ளலாம்.

சில குறிப்பட்ட கட்சிகளை சேர்ந்த வியாபாரிகள், உணவுப்பொருட்களை பதுக்குகின்றனர். இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களை பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என அமைச்சர் கூறியுள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.