
தொடக்க நாளிலேயே 62% மனைகள் முன்பதிவு: திருச்சி PROPLOT ‘வெற்றி நகர்’ திட்டத்திற்கு அமோக வரவேற்பு
PROPLOT நிறுவனத்தின் புதிய மனைப்பிரிவுத் திட்டமான ‘வெற்றி நகர்’ தொடக்க நாளிலேயே வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருப்பஞ்சலி பகுதியில் அமைந்துள்ள இத்திட்டத்தின் மொத்தம் 37 மனைகளில், 23 மனைகள் ஒரே நாளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மொத்த மனைகளில் சுமார் 62 சதவீதமாகும்.
இத்திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் வி.எஸ்.பி. குழுமத் தலைவர் திரு. வி.எஸ்.பி. இளங்கோவன், இந்திய கட்டுமான நிறுவன சங்கத்தின் திருச்சிராப்பள்ளி மையத் தலைவர் பொறியாளர் சுரேஷ்குமார், கட்டுமானப் பொறியாளர் கல்பாளையம் ராஜேஷ் மற்றும் தொழிலதிபர் ஒட்டன்சத்திரம் ரமேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
PROPLOT நிறுவனத்தின் நிறுவனர்களான அசோக் ராஜா மற்றும் முனைவர் பாலதண்டாயுதபாணி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். நிறுவனத்தின் விற்பனை மேலாளர்கள் ஹாதி மற்றும் ஆஷிக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“தொடக்க நாளிலேயே 23 மனைகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி,” என நிறுவனத்தின் நிறுவனர்கள் தெரிவித்தனர்.
இயற்கைக்கு உகந்த வாழ்விடங்களையும் திட்டமிட்ட மனைப்பிரிவுகளையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட PROPLOT நிறுவனம், பொதுமக்களின் எதிர்கால இல்லத் தேவைகளுக்கும் நில முதலீட்டுத் திட்டங்களுக்கும் ஏற்ற வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.

